நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Friday, 21 March 2014

கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்வது??

கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம்பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம் !!


பலருக்கு கேஎஃப்சி சிக்கனை எப்படி செய்கிறார்கள் என்ற கேள்விமனதில் எழும். அத்தகையவர்களுக்காக அந்த கேஎஃப்சி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்வதென்று பார்ப்போம். இதன் செய்முறையைப் பார்த்தால், இவ்வளவு தானா என்று பலர் ஆச்சரியப்படுவோம். ஏனெனில் அந்த அளவில் இந்த ரெசிபியின் செய்முறையானது எளிமையாக இருக்கும்.

சரி, அந்த கேஎஃப்சி சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
broasted-chicken

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து, சிக்கன் முக்கால்வாசி வெந்ததும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தண்ணீர் ஊற்றி சற்று நீர்மமாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதுப்போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் செய்தால், சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி


நன்றி
பரமக்குடி சுமதி

Monday, 20 January 2014

கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை தமிழக அரசே வழங்க முடிவு செய்துள்ளது.

திருப்பூர்: கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை தமிழக அரசே வழங்க முடிவு செய்துள்ளது.

கடும் வறட்சி காரணமாக தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் அதிக விலைக்கு தீவனங்களை வியாபாரிகள் விற்கின்றனர். அதிக விலைக்கு தீவனங்களை வாங்க முடியாத பலர் வேறு தொழிலுக்கு மாறுகின்றனர். மாடு எண்ணிக்கை குறைவதால், பால் கொள்முதல் குறைகிறது; விலையும் அதிகரிக்கிறது. அத்தியாவசிய பொருளில் முக்கியமானது பால் என்பதால், அதன் விலையை கட்டுப்படுத்த, மாடுகளுக்கான தீவனத்தை அரசே குறைந்த விலையில் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதும் தீவன கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கால்நடைத்துறை இணை இயக்குனர் ஒருவர் கூறியதாவது: மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒவ்வொரு மாவட்டத்திலும் நான்கு தீவன கிடங்குகள் அமைக்கப்படும். மாடு வளர்ப்பாளர், விவசாயி, தங்களது ரேஷன் கார்டை கொண்டு வந்து, எத்தனை மாடு என்பதை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தபின், ஒவ்வொரு மாட்டுக்கும் தனி கார்டு வழங்கப்படும். மாடுகளுக்கு தேவையான தீவனத்தை, கார்டை காண்பித்து, தீவன கிடங்கில் பெறலாம். வெளிமார்க்கெட்டில் வைக்கோல் ஒரு கிலோ, எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மொத்தமாக கொள்முதல் செய்து கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசு விற்க உள்ளது. மாடு ஒன்றுக்கு மூன்று கிலோ வைக்கோல் வழங்கப்படும். எத்தனை மாடு வைத்திருந்தாலும் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 21 கிலோ மட்டுமே கொடுக்கப்படும்,' என்றார்.

128 தீவன மையங்கள்:


32 மாவட்டங்களில் தலா நான்கு தீவன கிடங்குகள் விதம் மொத்தம் 128 தீவன கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், கொங்கணாபுரம், மேச்சேரி, நங்கனவள்ளி; கோவையில் கிணத்துக்கடவு, மதுக்கரை, சூலூர், சுல்தான்பேட்டை; திருப்பூரில் செங்கப்பள்ளி, காங்கயம், மூலனூர், வாளவாடி பகுதியில் தீவன கிடங்குகள் அமைகின்றன.

கலெக்டரே பொறுப்பு:


அந்தந்த மாவட்ட கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் தீவன கிடங்கு கொண்டு வரப்படுகிறது. கலெக்டர், கால்நடைத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் ஆகிய மூவர், வேளாண் இணை இயக்குனர், தோட்டக்கலை அதிகாரி ஒருவர் உள்ளிட்டோர் இணைந்த குழு ஏற்படுத்தப்படும். வைக்கோல் கொள்முதல் செய்வது, உண்மையான பயனாளிகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பணி, அக்குழுவின் மேற்பார்வையில் நடக்கும். இம்மாத இறுதியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இக்குழு தனது செயல்பாட்டை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Saturday, 9 November 2013

அக்னி அஸ்திரம் எப்படி தயாரிப்பது?

வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேகர் ஐயா வழிகாட்டுதல்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தயாரிக்க தேவையான பொருட்கள் :
###############################
புகையிலை அரை கிலோ,
பச்சை மிளகாய் அரை கிலோ,
வேம்பு இலை 5 கிலோ நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்) 15 லிட்டர் மற்றும் மண்பானை.

தயாரிக்கும் முறை:
################
நாட்டு பசுமாட்டு சிறுநீர் (கோமியம்)15 லிட்டர், புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ இவற்றை மண்பானையில் (வேறு பாத்திரங்கள் பயன்படுத்தக்கூடாது ) போட்டு நன்றாக கொதிக்க வைக்கவேண்டும் நான்கு முறை மிண்டும் மிண்டும் கொதிக்க வைக்கவேண்டும். இறக்கியபிறகு, பானையின் வாயில் துணியைக் கொண்டு கட்டி 48மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும் நீரின் மேல் ஒரு ஏடு போல் ஆடை படியும். அதை நீக்கி விட்டால் உள்ளே இருக்கும் தெளிந்த நீர்தான் அக்னி அஸ்திரம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

அக்னி அஸ்திரம் எப்படி பயன்படுத்துவது?
#################################
100 லிட்டர் நீரில்,.3 லிட்டர் அக்னி அஸ்திரம், 3லிட்டர் கோமியம் கலந்து பயிர்கள் மேல் தெளித்தால் போதும் புழு, புச்சிகள் காணாமல் போய்விடும்.

அக்னி அஸ்திர நன்மைகள் என்ன?
############################
1. பயிர்களில் காய்ப்புழு, தண்டு துளைப்பான் போன்ற புழுக்களைக் கட்டுப்படுத்த அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
2. எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை.

Monday, 7 October 2013

புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


புறக்கடையில் நாட்டுக்கோழி வளர்ப்பு


பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு -- காணொளி

பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலி ஒழிப்பில் இயற்கை உத்திகள்

எலிகளின் வாழ்க்கை முறை: நன்செய் மற்றும் புன்செய் நிலங்களில் காணப்படும்
சிறிய பெருச்சாளிகள் முதுகுப்பகுதி கரும்பழுப்பு நிறத்துடன் சிறிய வாலுடனும்
காணப்படும். இவைகளில் கருத்தரிக்கும் காலம் 4 நாட்கள் ஆகும். கருத்தரித்த 22
நாட்களில் 1 முதல் 11 குட்டிகளை ஈணும். எலிக்குட்டியானது பிறந்த 3 மாதத்திற்கு
உள்ளாகவே கருத்தரிக்க தயாராகி விடுகிறது. கதிர் முற்றும் மற்றும் அறுவடைக்
காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் அதிகமான அளவில் இனச்சேர்க்கை செய்து
குட்டிகளை ஈணுகிறது. சராசரியாக ஒரு ஆண்டிற்கு 100 குட்டிகள் வரை இனப்பெருக்கம்
இருக்கும்.

*எலி ஒழிப்பு உத்திகள்*

வயல் வெளியில்: ணு பயிர் அறுவடை முடிந்தவுடன் எலி வளைகளை வெட்டி எலிகளை
அழிக்கலாம்.
* ஆழமாக உழுவதன் மூலம் எலிவளைகளை அழித்து எலிகளை ஒழிக்கலாம்.
* வயல்களில் குறுகிய வரப்புகளை அமைத்து எலிகள் வளைகளை அமைப்பதை தவிர்க்கலாம்.
* வயல்களுக்கு அருகிலுள்ள புதர்களை அழித்து எலிகள் தங்குவதை தவிர்க்கலாம்.
* வைக்கோல் படப்புகளையும் பருத்தி மார் போன்றவைகளையும் வயல்களுக்கு அருகில்
வைக்கக்கூடாது.
* ஆந்தைகள் எலிகளை பிடித்து இரையாக உண்ணும். எனவே, அவைகள் வயல்களில் அமர்ந்து
எலிகளை பிடித்து உண்பதற்கு ஏதுவாக "டி' வடிவ குச்சிகளை நட்டு வைக்க வேண்டும்.
* தண்ணீர் அதிகம் பாய்ச்சி வளைக்குள் இருக்கும் எலிகளை மூச்சுத்திணறச் செய்து
விரட்டியடிக்கலாம்.
* இரவு வேளைகளில் விளக்குகளை பயன்படுத்தி விளக்கின் வெளிச்சத்தினால் ஓடாமல்
நிற்கும் எலிகளை அடித்துக் கொல்லலாம்.
* எலிகளை பாம்புகள் பிடித்துத் திண்பதால் பாம்புகளை அழிப்பதை தவிர்க்கலாம்.
* கிட்டிகள் வைத்து எலிகளை பிடித்து அழிக்கலாம்.
* வாய் அகன்ற பானைகளில் சாணம் கலந்த நீரை நிரப்பி மேற்பரப்பில் சோறு
போட்டுவைத்தால் அவற்றை உண்ணவரும் எலிகள் அந்த சாண நீரில் வீழ்ந்து மூழ்கி
இறந்துவிடும்.
தொடர்பு: ச.கண்ணையா, வேளாண்மை அலுவலர், பரமக்குடி. 04564-226 915.

நன்றி: தினமலர்