நாட்டுகோழி விற்பனைக்கு

திறந்த வெளியில் வளர்க்கப்பட்ட நாட்டுகோழி,நாட்டுகோழிமுட்டை,நாட்டுகோழி குஞ்சு விற்பனைக்கு

Country Chicken For Sales

Country Chicken,Hen, Egg, Goat, and Chicken For sales.

நாட்டுக்கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழி, ஆடு வளர்ப்பு, பசுந்தீவன உற்பத்தி, அசோலா, கோ-4, கரையான் உற்பத்தி மற்றும் இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை

அசோலா உற்பத்தி, மண்புழு உரம், பஞ்சகாவிய, ஜீவமிர்தம், அமிர்தக்கரைசல் மற்றும் வேளாண்மை குறித்த தகவல்கள்

ORGANIC FARMING;

Vermi compost, Azolla , Organic farming

Monday 15 April 2013

நாட்டுகோழி குழம்பு



நாட்டுக்கோழிக் குழம்பு

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி- 1 கிலோ
சிறிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 2
தேங்காய்  1/2 மூடி
கறிவேப்பிலை - 5 கொத்து
கொத்தமல்லி - சிறிது
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
மல்லி தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு தேவைக்கு ஏற்ப
பட்டை, கிராம்பு, சோம்பு தேவைக்கு ஏற்ப

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் அதில் வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை, தக்காளி போட்டு வதக்கவும்.

தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.

அதில் தேங்காய், மல்லித்தூள், மிளாகய்தூள், மஞ்சள் போட்டு இறக்கி ஆற வைத்து நன்கு அரைக்கவும்
அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
 பின்னர் இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
 அதன்பின் மஞ்சள், தூள், கரம் மசாலா தூள், கோழி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். கோழித்துண்டுகள் கொஞ்சம் வேகும் வரை வதக்க வேண்டும.

அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி கறி நன்கு வேக விடவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.. இப்ப ஆவி பறக்கும் நாட்டுக்கோழிச்சாறு தயார்.


நாட்டுகோழி விற்பனைக்கு


தொடர்புக்கு மின்னஞ்சல்: sreekaviyafarms@gmail.com

நாட்டு கோழி குஞ்சு!


Sunday 14 April 2013

நாட்டு கோழி வளர்ப்பு!


நாட்டு கோழி வளர்ப்பு



நாட்டுகோழி பண்ணை  அமைக்கும் நண்பர்களுக்கு இது உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன்.இன்றைய நிலையில் ஆர்கானிக்,ஆர்கானிக் என்று மக்கள் இயற்கை  உணவு முறைகளை  நாடி செல்லும் நிலையில், இயற்கையாக கிடைக்கும்  நாட்டு கோழிகளுக்கு இனி வரும் காலங்களில் நல்ல கிராக்கி  உண்டு என்பதை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை  பெருகி வரும் நாட்டு கோழி பண்ணைகள் மூலமும் நாட்டு கோழிகளின் விலை அதிகரிப்பின்  மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம் ( பிராய்லர் கோழிகள் மூலம் ஏற்படும் தீமைகள் குறித்த உண்மைகள் ,அதன்  மிக பெரிய வியாபார சந்தை கருதி மூடி மறைக்கப்பட்டு வருவது வேறு விஷயம்.)

பண்ணை அமைப்பு முறை
-----------------------------------------------

நாட்டு கோழிகள் இயல்பாகவே மிகவும் பலமானவை மழை,காற்று,அதிக வெயில்  போன்றவற்றை எளிதாக தாங்கும் குணம் உள்ளவை எனவே திறந்த வெளியில் கம்பி வேலி அமைத்து எளிதாக  வளர்க்கலாம்,இதற்கு "டயமன்ட் கிரில்" என்ற மிக சிறியஓட்டைகள் உள்ள வேலிகள் அமைப்பதன் மூலம் கோழி குஞ்சுகள் வெளியே செல்வதை தடுக்க முடியும். நாட்டு கோழி தேடி பாம்புகள் வருவது வாடிக்கை. அதனால், வேலியின் கிழே முழுவது வலை அடித்து விடுவதன் மூலம்  பாம்புகளை நாம் தடுக்க முடியும்.பொதுவாக ஒரு ஏக்கருக்கு 2000  கோழிகள் வரை எளிதாக வளர்க்க முடியும், இதற்கு கொட்டகை என்று பெரிதாக ஒன்றும் தேவை இல்லை,மழை,வெயில் போன்றவற்றில் இருந்து ஒதுங்க சிறிய செலவிலான கூரை  போன்ற கொட்டகை போதுமானது.

கோழி தீவனம்
------------------------------
கோழிகளுக்கு உணவாக  பச்சை கீரைவகைகள், அசோலா,கினியா புல்,கோ-4,குதிரை மசால் ,காய்கள் மற்றும் அரிசி போன்றவகைகள் கொடுக்கலாம்.பிறகு இது இயற்கையாக சுற்றி திரிவதால் ,காட்டில் உள்ள புழு பூச்சிகளையும் உணவாக உட்கொள்ளும்.

நோய் தடுப்பு
-----------------------
தினமும் அனைத்து கோழிகளையும் நன்றாக கவனிக்க வேண்டும்.ஏதாவது ஒரு கோழிக்கு நோய் வந்தாலும் அது வேகமாக அனைத்து கோழிகளுக்கும் பரவி விடும் எனவே   ஒரு கோழிக்கு நோய் வந்தாலும்  உடனடியாக கண்டு பிடித்து மருந்து கொடுத்து விடுவது அவசியம்.

விற்பனை
-------------------
குஞ்சுகள் வளர்ந்த 3 மற்றும் 4 மாதங்களில் இருந்து விற்க ஆரம்பிக்கலாம்,இயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் என்பதால் அந்த பகுதில் உள்ள பொதுமக்களே நல்ல ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள்.மற்றும் வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்காமல் பக்கத்துக்கு நகர் புறங்களில் உள்ள அசைவ உணவு விடுதிகளுக்கு கோழிகளை சப்ளை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம் .

Country chicken